வானதி சீனிவாசனின் எடுத்துரை

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும்! தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக மற்றும் மனித குலத்துக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு மதச்சாயம் பூசக்கூடாது!
லஞ்சம் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு!
யார் மக்களுக்கான பணிகளை செய்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். குறைகளை கேட்டு சொல்லுங்கள், அதை சரி செய்ய பாருங்கள். தேர்தலில் யார் எங்கே நிற்பார்கள் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தெரியும். யாருக்கு ஆதரவளிப்பது என்று மக்களுக்கு தெரியும்.
இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட தலைவர்கள் பற்றியும் கூட பாஜக சிந்திக்கிறது. அதுதான் மற்ற கட்சிகளுக்கும் பாஜகவிற்கும் இருக்கின்ற வித்தியாசம். ஒரு மாவட்டமாக இருக்கட்டும், ஒரு மாநிலமாக இருக்கட்டும், அடுத்து வரக்கூடிய 10 வருடம் யார், 20 வருடம் யார் என்பது குறித்த தெளிவான திட்டமிடல் எங்களிடம் இருக்கிறது.